பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் -- 5o

எப்பொழுதும் போர் மேகமே சூழ்ந்திருந்த காலங்களில், பொழுதுபோக்குக்காக, விளையாட்டு எனும் தனிப்பட்ட ஒரு செயலில் இறங்க நேர மின்றி, அந்த மக்கள் போரையே விளையாட்டாகக் கருதினர். அப்படியே வாழ்ந்தனர்.

அவ்வாறு அவர்கள் விளையாட்டில் ஈடு பட் டாலும், அதுவும் வீர விளையாட்டாகவே விளங்கி வந்திருக்கின்றன.

இத்தகைய ஏற்றமிகு நம்பிக்கையுடன் வாழ்ந்த மக்களின் பொழுது போக்காக விளங்கிய பல நிகழ்ச்சிகள் இருத்தன. யானையுடன் யானையை மோதவிட்டுப் போர் புரிய வைத்து, வேடிக்கை பார்த்ததும் ஒன்று. அதில் அவர்களுக்கு அச்சம் இருந்ததால், மரங்களில் ஏறியும், குன்றின் மேல் ஏறி நின்று கொண்டும் கண்டு மகிந்தனர் என்று ஒரு குறளைக் கொடுத்திருக்கிறேன்.

“குன்றேறி யானைப்போர் கண்டற்றாற்றன்

கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை’ (858)

இனி ஒரு செய்தியை உங்களுக்கு உணர்த்தியாக வேண்டும். எம் காலத்து மக்கள், போரிடும்போது, கைக்கொண்ட ஒரு சில போராயுதங்களைக் கூறு கிறேன். -

போரிலே அதிகமாகப் பயன்பட்டவை வேல், வில், அம்பு, யானையேற்றம். குதிரையேற்றம்,