பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்வேல் வழுதி எனும் பாண்டியனின் ஆணைப்படி, அவர் மனம் மகிழ, தெய்வத் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார் என்றார் கீரந்தையார்.

எப்படிபட்ட திருவள்ளுவர் என்று நமக்கு விளக்கம் தருகிறார் மாணிபூதனார்.

மறன் எறிந்த வாளார், நெடுமாறன் வள்ளுவனார் என்கிறார் புலவர். அதாவது வாள் படையைத் தாங்கி சண்டை செய்வதில் வள்ளுவர் வல்லவர். இவர் கருங்கை ஒன் வாள் பெரும் பெயர் வழுதியுடன் போர்க்களம் சென்றும், தாமே தனித்து சென்றும். பலமுறை பகைவர் களுடன் மோதி வெற்றி பெற்றவர்.

வழுதியின் அரசிலே, உள் மந்திரத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தவர். உலக அறிவும், உன்னதமான அரசியல் ஞானமும் மிகுந்தவர். தொல்காப்பியத்தையும், மூவாயிரம் எனும் தத்துவ நூலையும் கற்றுத் தேர்ந்த வித்தகர். போரிடுவதில் இணையற்றவர். அவர் பெயர் நெடுமாறன் என்றும் புலவர் பேசுகிறார்.

இப்படி நமக்கு வள்ளுவரை நல்லோவியமாகக் காட்டு கிறது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட திரு மந்திர நூல். பக்கம் 82-83ல் மேற்காணும் விளக்கம் உள்ளது.

வள்ளுவர் பெரும் வீரர். வாளார் என்ற பெருமை மிக்கவர். வலிமை கொண்டவர். போர்களம் கண்டவர்’ வென்றவர்,

அதனால் என்ன ? வள்ளுவரின் சிந்தனைகள் எப்படி விளையாட்டுக்குப் பொருந்தும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

போரிலிருந்து தான் விளையாட்டுக்கள் மெருகேறி பிறந்திருக்கின்றன என்பது, இன்றைய ஆராய்ச்சியாளர் களின் துணிபு.