பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 75

தோற்றம் எவன் செய்யும்? (272) என்று வருத்தப் பட்டார்.

இரண்டு கால்களும் நெடுந்துண். முதுகுத் தண்டு விட்டமாக நீண்டு கிடக்கிறது. விலா வெலும்புகள் கூடாக விரிந்து கிடக்கின்றன. அப்படிபட்ட எலும்புக் கூட்டை, சதையை புன்மை மிக்கத் தோல் காக்கிறது. அதற்குத் தான் மனித உடல் என்று பெயர். அந்த உடலின் சொந் தக்காரர்கள் வாழ்கின்ற பொய்ம்மை வாழ்க்கை என்று ஒரு தமிழிலக்கியம் கூறுகிறது, என்று நான் கூறினேன்.

இந்த மக்களைப்பற்றி இப்படியொரு பாட்டா? என்ன பாட்டு அது? பாடுங்கள் பார்ப்போம் என்றார்.

‘நெடுந்துரண் இருகாலா, நீண்ட முதுகுத்தண்டு ஆங்கு கொடுங்கால் விலா என்பு நற் கோலியுடங்கி புன் தோலால் வேய்ந்த புலால் வாழ்க் குரம்பை’

என அறநெறிச் சாரம் பாடுகிறது என்றேன்.

ஆமாம், மக்கள் வடிவமைப்பைப் பற்றி மிகவும் விளக்கமாகவே பாடியிருக்கிறது. உண்மைதான்.

அகம் குன்றி விடுகிறபோது, புறமும் குன்றிப் போகிறது. புறத் தோற்றம் பெருமையுடையதாக எப்பொழுது இருக்கும் என்றால், அகத்தில் தெளி வும் வலிவும் இருக்க வேண்டும். அகம் அச்சத்தின்