பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 83

அதை ஏற்றுக் கொள்கிறேன். போராட்டம், போராட்டம் என்கிறார்களே! என்ன போர் என்றார் வள்ளுவர்.

எதிர் கட்சிகளுக்குத் தொந்தரவு. தரவேண்டும் என்பது தான் நோக்கம். அதற்காகத் தான் இந்தக் கூட்டம். கொஞ்ச நேரம் கத்திக் கொண்டே, குறிப் பிட்ட தூரம் வரை போய், கலைந்து போய் விடு வதற்குப் பெயர் தான் போராட்டம்.

போர் ஆட்டம் என்பது தான் போராட்டம். இங்கே போர் என்பது நிலையாக இல்லாமல், சிறிது நேரத்தில் ஆட்டம் கண்டுவிடும் என்பதன் நிலையேயாம். இப்படிக் கத்துவது தான் போர்; போர்க்களம் என்பது பொது மக்கள் நடக்கும் வீதி கள், அவர்கள், எமனே வந்தாலும் எதிர்ப் போம். எதிரில் வந்தால் உதைப்போம் என்று

ாடுவதைக் கேளுங்கள் என்றேன்.

ஆமாம்! ஆமாம்! அவர்கள் வீரம் புரிகிறது. இஃதல்லவா ஈடு இணையற்ற வீரம்! அவர்கள் கொள்கை வேகத்தால் தான், கொடுரமான எமனையும் கூவி அழைக்கின்றார்கள். ஆகா! என் பாடலுக்கு உயிர் வந்து விட்டது. தமிழர்க்காக நான் பாடிய வரிகள் தகைமை பெற்றுக் கொண்டன என்று உணர்ச்சியுடன் பேசினார்.

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் கிற்கும் ஆற்றல் அதுவே படை (765)