பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

புகுந்து விட்டதே’ என்று வள்ளுவர் வருத்தப் பட்டார்.

இப்பொழுது நாம் நமது தமிழ்ச் சமுதாயத் தின் ஒரு பிரிவைப் பார்த்து வந்தோம், நமது சமுதாயம் இப்படித் தான் எல்லோருக்கும் எடு பிடியாய் இருந்து கொண்டு வருகிறது.

அறிவும், திறமையும், ஆற்றலும், ஆண்மை யும் நிறைய தமிழர்க்கு இருந்தாலும், அவற்றைத் தங்கள் தனிப்பட்ட முன்னேற்றத்திற்குப் பயன் படுத்தவே முனைகின்றார்கள். அது தவறல்ல, இருந்தாலும், தனி மரம் தோப்பாகாது என்பது போல, தனித்தனி சுயநல முயற்சிகள் இனிதான முடிவுகளைத் தராமல் ஏமாற்றி விடுகின்றன.

ஒற்றுமை குறைந்த சமுதாயமாக, மற்ற வரிடம் தங்கள் இனத்தைத் தாழ்த்திக் கூறுகிற சமுதாயமாக; பெற்ற இன்பங்களைப் பிறர்க்கும் வழங்க மறுக்கும் பிடிவாதமுள்ள பின்னடைந்த சமுதாயமாக இருந்து கொண்டு வாழ்ந்து வருவதை உங்களிடம் காட்டத்தான், இந்த வழியாக உங்களை அழைத்து வந்தேன் என்றேன்.

உண்மைதான், எம் காலத்து மக்களின் நடை உடை பாவனைகளைப் போல இன்று இல்லையே! வேற்று மொழி, வேற்று உடை, எல்லாமே மாறு பட்டுத் தான் கிடக்கிறது. இதை நாம் காலத்தின் கோலம் என்று நான் அமைதி கொள்வேன். ஆனால், உள்ளத்தால் குறைந்ததுபோல,