பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.88 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (605)

விரைந்து செய்கிற வேலைகளை தாமதப் படுத்திச்செய்தல்; வேலைகளைச் செய்யாமல் காலம் கடத்துதல்; செய்தாக வேண்டிய காரியத்தை செய்திட மறந்து போதல்; செய்ய முடிகிற காரியத்தை செய்திட சோம்பல் படுதல்; நேரம் கெட்ட நேரத்தில் தூக்கத்தில் ஆழ்ந்து விடுதல். இந்த நான்கு குணங்களும் ஒருவரை எவ்வளவுதான் அறிவால் உயர்ந்தவராக இருந்தாலும், கெட்டுப் போகச் செய்துவிடும் வல்லமை வாய்ந்தனவாகும்.

உண்மை தான். நிறைய தன்மானம் பேசுகிற தமிழர்களின் தரமும் திறமும், முன்னேற்றமும் முற்போக்கும் மற்ற இனத்தைவிட மங்கிப்போய் கிடப்பதற்கு நீங்கள் கூறுகிற காரணங்கள் சரியாகத் தான் இருக்கின்றன என்றேன்.

இன்னும் இருக்கிறது என்று என்னைப்பார்த் தார். இவ்வளவு விரைவில் தமிழகத்தையும் தமிழர் களையும் புரிந்து கொண்டு விடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. -

வான் புகழ் வள்ளுவர் அல்லவா என்று வியந்தவாறு கண்மூடிநிேன்றேன். என்னை ஒன்று வந்து தாக்கும் வரை! வள்ளுவர் என்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.