பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஒன்று ஆரம்பமாக இருக்கிறது. அயல் நாட்டு அணி ஒன்றுடன் நமது நாட்டு அணி விளையாடப் போகிறது.

எவ்வளவு நேரம் என்றார்.

இது நேரக் கணக்கில் ஆடுகின்ற ஆட்டம் இல்லை. இது நாள் கணக்கில் ஆடக் கூடிய ஆட்டம். எவ்வளவு நாள் ஆடினாலும், வெற்றி தோல்வி தெரியாத ஆட்டமாகவும் இது முடியும் என்றேன்.

வெற்றி தோல்வி தெரியாமல். விளையாடுவது எதற்கு என்றார் வள்ளுவர்.

எதற்கு என்ற கேள்விகளை நிறைய எழுப்பு கின்ற விளையாட்டு தான் இது. இதைக் கண்டு மகிழத்தான், கார்களில் ரசிகர்கள் செல்கின் றார்கள்.

இன்னும் ஏன் நிற்கின்றீர்கள் என்று மீண்டும் எழும்பிய அதட்டல் குரலுக்கு மரியாதை கொடுத்து, நடக்க ஆரம்பித்தோம். நிறைய நிகழ்ச்சிகள் நடக்கப் போகின்றன. என்பதை அறியாமல் நடக்கத் தொடங்கினோம்.