பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வள்ளுவர் இல்லம்

பேச்சால் வேறு பயன் இல்லாவிடினும், வேடிக்கையாகப் பொழுது போகின்றதல்லவா? பொழுது போக்குப் பயன் கருதி, யாரையும் புண்படுத்தாத பேச்சைப் பேசலாமே.” என்று சிலர் வினவலாம். அறிஞர்கள், பொழுதுபோக்குப் பயனைப் பெரும் பயனாகக் கொள்ளாது சிறு பயனாகவே கொண்டு அதனைக் கைவிடுவர். அன்றாட வாழ்க்கைக்குக் கட்டாயம் பயன் தரத்தக்க பேச்சுக்களே அறிஞருக்குப் பெரும்பயன் தரத்தக்க பேச்சுக்களாகும். அப்பயனுள்ள பேச்சைக் கடைப்பிடித்தால், எல்லோராலும் அடைதற்கரிய அரும் பயனாகிய புகழ்-பெருமை-மதிப்பு கிடைக்குமன்றோ? இவற்றையெல்லாம் உள்ளடக்கியே, அரும் பயன் ஆயும் அறிவினார் பெரும் பயனில்லாத (சிறு பயன் தரும்) சொல் சொல்லார்’ என்றார் ஆசிரியர்.

அரும் பயன் ஆய்தல் என்றால், இன்னது செய்தால் இன்ன சிறு பயன்தான் கிடைக்குமென்றறிந்து அதனை விலக்கி, இல் துை செய்தால் இன்ன பெரும் பயன் கிடைக்குமென்றறிந்து, அதைப் பெறுதற்கேற்ற நடைமுறை யினைத் தேடி யாராய்தல்-என்று பொருளாம். எனவே, சிறு பயன் தரத்தக்க சொற்களைப் பேசுபவர் அரும் பயன் ஆயும் அறிவிலாதவர் என்பதும், சிறு பயன் தரத்தக்க பேச்சைப் பேசுதல் பெருமைக்கும் புகழுக்கும் உகந்ததன்று என்பதும் விளங்கும்.

பயனில்லாத சொற்களைப் பொச்சாந்தும்-மறந்துங் கூடப் பேசவேகூடாது. எங்கும் என்றும் எவரிடமும் பொருள் உள்ள - பயன் உள்ள சொற்களையே பேச