பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 177

நண்பர்க்கோ, அயலார்க்கோ தீமை செய்யாமல் இருப்பதே ஒரு சிறந்த அறிவு மிக்க செயலாகும் என்றால், பகை வர்க்கும் தீமை செய்யாதிருப்பது அதனினும் அறிவு மிக்க செயல் என்றுரைக்க வேண்டும்.

நாம் பிறருக்குக் கேடு சூழ்ந்தால் நீதியே நமக்குக் கேடு சூழும். அதாவது நாம் பிறருக்குக் கேடு செய்தால், நீதி-சட்டம் நம்மை வாளா விடுமா? நீதிமன்றத்தில் நீதியைக் காட்டி நீதிபதி தண்டிப்பாரன்றோ? அல்லது பிறரும் தண்டிக்கலாமல்லவா? ஆதலின் மறந்தும் பிறர்க்குக் கேடு சூழக் கூடாது.

ஒன்றும் இல்லாத வறியன் நல்ல வழியில் பொருளீட்டி னால்தான் செல்வம் உள்ளவனாவான்; தீய செயல்களைச் செய்தானாயின் இல்லாதவனாகவே ஆவான். திருடன் தான் ஒன்றும் இல்லாதவன் என்று கருதி, இரவில் இன்னொருவர் வீட்டில் புகுந்து திருடினால் உள்ளவனாய் விடுவானா? அப்பொழுதோ, அல்லது பின்பு எப்பொழுதோ அகப்பட்டுக் கொண்டு, திருடியதை இழப்பானல்லவா? சில திருடர்கள், குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்பவனைப் போல, திருடி இன்புறச் சென்று அடியுதை பட்டுத் துன்புற்று மீளுவதும் இயற்கைதானே! கள்ளவணிகர்கள், கையூட்டு (இலஞ்சம்) வாங்கிகள், பிறர் பொருளை வஞ்சகமாகக் கவர்பவர்கள் முதலிய பகல் திருடர்கள் - அரசியல் திருடர்கள் எல்லாரும் அத் தீத் தொழில்கள் அறியப் பட்டும், அரசாங்கத்தாரின் தண்டனையைப் பெற்றும், உள்ளதையும் இழந்து விடுவதும் இயல்புதானே! அவர்கள் அரசியலாரால் அறியப்படாமல் தப்பித்துக்கொண்டு