பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 199

பிள்ளைகளும் துய்ப்பதால் நேர் முகத்தில் இவர்களுக்கு என்ன நன்மை ஒன்றும் இல்லையே! இவர் உயிர் வாழ்ந்த போது அச்செல்வத்தால் பெறவேண்டிய நேர்முக இன்பத்தை இழந்தவர்கள் இழந்தவர்கள்தானே! அதனால் செல்வத்தையே இழந்தவர்களாகத்தான் பொருள்! ஆனால் இவர்கள் ஒருமுறை ஈத்துவக்கும் இன்பத்தை அறிந்து விடுவார்களேயாயின், பின்னர் செல்வத்தை வீணே வைத்து இழக்க மாட்டார்கள்; சுவை கண்ட பூனை விடாதல்லவா? அந்த இன்பத்தை அறியாததனால்தான் வீணே இழந்து விடுகிறார்கள் போலும்’ என்னும் போக்கில் அமைந்துள்ள இக் குறள்நடையில் எத்துணைச் சுவை உள்ளது!

பிறர்க்குக் கொடுக்காமல் நாம் மட்டும் புசித்து என்னதான் வாரிக் கட்டிக்கொள்ளப்போகிறோம். இந்தத் தசை முட்டையை வளர்ப்பதைத் தவிர! சிலர் உண்பதற்கு முன் இரவலர் (பிச்சைக்காரர்) வந்து கேட்டால், இன்னும் நேரம் ஆகும் என்கின்றனர்; உண்டபின் வந்தால், நேரமாய் விட்டது என்கின்றனர். அதனால், உண்டு கொண் டிருக்கும்போது வந்தாலாவது ஒரு கைப்பிடி சோறு போடுங்களையா என்னும் பொருளில் “யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி’ என்றார் திருமுலர் தம் திருமந்திரத்தில்! உண்மைதானே! பிறரிடம் சென்று இரத்தல் (யாசித்தல்) மிகவும் இழிந்த செயலாகும். இதனினும் இழிந்த செயல் யாதெனின், எச்சில் கையால் காக்கை ஒட்டவும் மனம் வராமல், தாங்கள் மட்டுமே தனித்து உண்ணுதலாகும். ஓர் ஏழை இரவலன் இருக்கிறான் - பிறர் பார்த்து விடுவார்களோ, பார்த்துக்