பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வள்ளுவர் கண்ட அரசியல் இவ்வாறு இரப்பவர் இருந்தால்தானே ஈகை யாளர்கட்டுப் புகழ் உண்டாகும். இவர்கள் இல்லாத போது புகழ் ஏது? இக்கருத்தில் ஆபுத்திரன் என் பான் எத்துணை அழகுபட இந்திரனிடத்தில் கூறி ஞன் பாருங்கள் ! அறஞ்செய் மாக்கள் புறம் காத் தோம்புகர் கற்றவம் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர் நல்காடு என்பது மணிமேகலை இக்கருத்தினேயே புறநானூறும் உடையோர் ஈத லும் இல்லோர் இரத்தலும் கடவதன்மையின் கையற வுடைத்து' எனக்கூறுகிறது. யாசகனும் சிறிது எச் சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். தனக்குப் பிறர் ஈயவில்லையாயின் அதன் பொருட்டு அவர்களைக் கோபித்தல் ஆகாது. இவன் யாசித்தற்குக் காரணம் தன்னிடம் பொருள் இன்மையே அல்லவா? பிச்சை புக்குண்பான் பிளிருமை முன் இனிது” என்னும் இனி யவை நாற்பதில் உள்ள தொடர்ப் பொருளே கினேவில் கொள்ளுதல் வேண்டும். இந்த அதிகாரத்தில் வள்ளுவளுர் இர்த்தம் இழி வன்று என்று கூறியிருப்பதாகக் கொண்டு எவரும் யாசிக்க எண்ணுதல் கூடாது. காட்டில் எல்லோரும் செல்வர்களாக இருத்தல் இயலாது ஆதலின், வறுமைத் துன்பத்தால் இரக்க நேரிடும் ஆதலின், இரவினை இழி வாகக்கருத வேண்டா என்பதற்கும், இரந்தவர்கட்கு ஈய வேண்டுவது செல்வர் கடமை என்பதற்கும், அத