பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. மருந்து. காடு கன்மக்களைப் பெற்றும், கல்லமைப்புப் பெற் றும், பொருளாதர முன்னேற்றம் அடைந்தும், அப் பொருளைப் பிறர்க்கு ஈயும் கடப்பாட்டினேப் பெற்றும் இருப்பதோடு, நாட்டு மக்கள், நல்ல உடல் நலம் வாய்ந்தவராய்,நோய் அணுகாவழியில் தம்மைப்பாது காத்துக்கொள்பவராய் இருத்தல் வேண்டும், நோய் அனுகாமைக்குச் சில முறைகளை நாட்டு மக்கள் கையாள வேண்டும். நோய் வருதற்குப் பல காரணங்கள் உண்டு. அவையே பழவினைத் தொடர்பிலுைம் ஏனைய காரணங்களாலும் எனலாம். ஏனைய காரணம் இன்ன என்பதைக் குமரேச சதகம், கல்லினல் மயிரினல் மீதுரண் விரும்பலால் கருதிய விசாரத்தினுல் கடுவழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கணிபழம் கறியுண்ணலால் நெல்லினுல் உமியினல் மூழ்கலால் கித்திரைகள் இல்லா மையால் நீர்ப்பகையினுல் பனிக் காற்றிலுடல் கோதலால் நீடுசருகிலே யூறலால் - மெல்லிகல் லார்கலவி அதிகமுன் விரும்பலால் வீழ்மலம் சீக்குகையில்ை மிகுசுமை எடுத்தலாய் இளேவெயிற் காய்தலால் மெய்வாட வேலேசெயலால் வல்லிரவி லேதயிர்கள் சருகாதி உண்ணலால் வன்பிணிக்கிடம் என்பர்காண். என்று கூறுவதால் அறிந்து கொள்ளலாம்.