பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருந்து 121 வாவது, சுவை வீரியங்களாலும் அளவாலும் பொருங் திய உணவு. செயல்கள் ஒத்தல் என்பது மனம் மொழிமெய்களால் செய்யும் தொழில்களை அவை அவை வருந்துவதற்கு முன்னே செய்யாது நீக்கல் வேண்டும் என்பதாம். உறக்கமும், இன்பமும் கூட உடம்பின் அளவிற்கு மிகுதலும் குறைதலும் கூடாது. நோய்க்கிடங்கொடேல்" என்னும் ஆத்திகுடி வாக்கி யம் நம் கினேவிற்கு வருதல் வேண்டும். இப்படிக் கவனித்து காம் உண்ட உணவு சீரண மாயிற்று என்பதை அறிந்து அதற்குப் பிறகு உண்டுவந்தால் உடம்புக்கு நோய் வருமா ? வரா தன்ருே வராதபோது, மருந்து தேவைப்படுமோ ! படாதன்ருே உண்ட உணவு சீரணமாயது என்பதை உடல் இலேசாக இருத்தலானும், ஏப்பம் கல்முறை யில் வருவதாலும், புளியேப்பம் இல்லாமல், வாய்காற் றம் இன்மையாலும், மனமும் உறுப்புக்களும் தொழிற் செய்ய முன்னிற்றலாலும், பசி மிகுவதாலும் அறிந்து கொள்ளலாம். உண்ணும் முறையினை மேற்கொள்ளும் போதும் செரித்தாலும் அன்னம் இரண்டு கூறும், ர்ே ஒரு கூறும், காற்று உலவ ஒரு கூறும், அறிந்து உண்ண வேண்டும். வாத பித்த சிலேட்டுமத்திற்கு வேண்டாத கறி வகையை நீக்க வேண்டும். பின் அசனம் பண்ண வேண்டும்; மனம்மெய்ம் மொழிகள் வருந்தாமல் வகுத்துத் தொழிலே மாறுபாடா இனிய உணவை மிகப்பசித்த இடத்தின் உடற்குப் பொருந்த உணின்