பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் பேறு என்றால், நல்ல பிள்ளைகளைப் பெறும்பேறு என்பது பொருள். வாழ்க்கைத்துணை நலத்திற்குப்பின் மக்கட்பேறு அமைக்கப்பெற்றதற்குரிய இயைபுமுன் குறளாலேயே உணர்த்தப் பெற்றது. இப்பகுதிக்கு புதல்வரைப் பெறுதல் என்றல்லவா பெயர் எழுதியுள்ளார் பரிமேலழகர் ஈண்டு ஒரு சிலர் "மக்கட்பேறு" என்று எழுதுவதின் காரணம் என்னையோவெனின், இயம்புதும்; முன் அதிகாரத்திலும் மக்கட்பேறு என்றே தோற்றுவாய் செய்துள்ளார் வள்ளுவர். இவ்வதிகாரத்தும் அனைத்திடங்களிலும் மக்கள் என்ற பெயரையே வழங்கியுள்ளார்; ஆதலின் என்க. மேலும், மக்கள் என்னும் செந்தமிழ்ச் சொல் இருக்க, புதல்வர் என்னும் புதுமொழிச் சொல்லைப் புகுத்துவது எற்றுக்கோ? வள்ளுவர்க்கு அந்நோக்கம் இருந்திருப்பின் குறள்களிலேயும் புதல்வர் என்னும் சொல்லைப் புகுத்தியிருப்பாரே! புதல்வர்க்காகப் பரிந்து போராடும் சிலர், பிள்ளை "புத்" என்ற நரகத்திலிருந்து தந்தையை மீட்பதால் புதல்வர் என்னும் பெயரே பொருந்தும் என்கின்றனர். மீட்கக்கூடாது. நரகத்திலேயே தள்ளவேண்டும் என்று யாம் சொல்லவரவில்லை. நன்றாக மீட்டுச் சுவர்க்கத்திற்கே அனுப்பட்டும். ஆனால், நரகத்திலிருந்து மீட்பது பிள்ளையா? (மனிதரா?); அல்லது புதல்வர் என்னும் சொல்லா? (எழுத்துக்களா?) மீட்பது சொல்லன்று, பிள்ளையே யென்றால் மக்கள் என்னும் சொல்லை வழங்குவதில் என்ன தவறு? 1. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. (பதவுரை) பெறுமவற்றுள் - (ஒருவன்) பெறவேண்டிய பேறுகளுக்குள், அறிவு அறிந்த - அறிய வேண்டியவைகளை 56 பேரா. சுந்தர சண்முகனார்