பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108 வேண்டியவர்கள் வாழ்க்கைத் துணைவியர்களாவார்கள். குடியில்லாத வீடு பாழடைந்து கிடக்குமன்றோ! அது போன்றே நினைத்தல் வேண்டும், கணவனில்லாத மகளிர் வாழ்க்கை: வாழ்க்கைத் துணை' என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியாத மக்கள் அர்த்தமில்லாத புரட்சி வேகத் தில் புன்மையான கருத்துக்களைப் பரப்பிவிடுகின்றனர். அடிமை என்பது வேறு; அடக்கம் என்பது வேறு. அன்பும்-அடக்கமும்-அமைதியும் நிறைந்த வாழ்க்கை தான் பெண்மை நிறைந்த வாழ்க்கையின் சிறப்பியல்புஆகும். இதனைத்தான் மனைமாட்சி என்றும் கூறலாம். தான் ஒரு நல்ல அரிய துணை என்று எண்ணி நடந்து கொள்ளுதலே சிறந்த மனைவியின் கடமையாகும். கொழுநனின் கருத்துக்களுக்கும்-நல்ல முறைகளுக்கும் அன்புடன் செவிசாய்த்து உற்ற துணையாக இருப்பதுதான் மனைவியின் கடமையுமாகும். பண்பில்லாத கணவன்மார் களுக்கு இவ்வுரை பொருந்தா தென்க. எனினும், இடித்திடித்துக் கூறும் நற்றுணையாகத்தான் மகளிர் இருத்தல் வேண்டும். மனையாளை அஞ்சும் மகனாக இல்லறத் தலைவன் வாழ்தலும் அப்படி அவன் ஆக்கப்பட் டிருத்தலும் பழிபட்ட வாழ்க்கைக்கும், கெடுதி பயக்கும் நிலைகளுக்கும் இடந் தருவனவாகவே முடியும். இல்வாழ்க்கைத் துணைவிக்கு அஞ்சி வாழ்பவன் இந்த உலகில் எக்காலத்தும் பெயர் அடையவும் முடியாது; நல்ல வர்கட்கு நற்றொண்டு செய்யவும் முடியாது. இதனை விளக்கும் குறளொன்றினை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன். \ இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்.