பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

1 1 0 உதாரணமாக ஒன்று கூற ஆசைப்படுகின்றேன். பெண் களுக்கென்றே தனிப்பட்ட சில குணங்கள் அமைந்துள்ளன. அவைகள் பெண்களிடத்தில் மட்டுந்தான் இருத்தலும் முடியும். அவைகளுள் சிறந்தது நாணம் என்கிற பண் பாகு மென்றறிக. நாணம் என்பது ஆடவர்களுக்குங்கூட இருக்கவேண்டிய குணந்தான் என்றாலும் பெண்களிடத்தில் அக் குணம் எத் தகைய இடம் பெற்றுள்ளது என்பதை நன்கு புரிந்துகொள் ளுங்கள் . பிறர் பழிக்கும்-உலகோர் தூற்றும்-நேர்மையற்றமானம் விட்ட-அறமல்லாத-செயல்களைச் செய்வதற்கு ஆண்கள் நாணுதல் வேண்டும். செய்யும் செயல்களில் மட்டும், மேற்சொன்ன காரணங்களினால் நாணம் ஆண் களுக்கு இருத்தல் வேண்டும். தொழில்கள் செய்வதற்கே நாணம் இருத்தல் வேண்டும் என்பதாக எண்ணிவிடுதல் கூடாது. நாணம் என்பது-ஒர் அளவு - கட்டுப்பாடு - முறை என்பது போன்ற கருத்துக் களில் வைத்துக் கணக்கிடப்பட வேண்டிய ஒன்று ஆகும். ஆண்களுக்கு இந்தப்படியாக இருக்கவேண்டிய நாணம் என்கிற குணம், பெண்களைப்பற்றிய நிலையில் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதையும் கண்டுணர்வீர்களாக. உலக வாழ்க்கையில் எல்லாத்துறைகளிலும்-நடைமுறை களிலும் நாணம் இருந்துகொண்டே இருக்கவேண்டியது பெண்தன்மையாகும். சொல்-செயல்-நடைமுறை அனைத் திலும் நாணம் இருத்தல் பெண்களுக்கு அவசியமாகின்றது. இவ்வுண்மையினை நன்கு சிந்தித்துப்பார்க்கவேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். - நாணம் என்பதை ஒர் அளவு என்றும், கட்டுப்பாட் டினை உணர்த்தும் வேலி போன்றதென்றும் கூறியதை