இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருக்குறளார் வீ. முனிசாமி அவர்கள் தமது இளம் வயதிலேயே திருக்குறளில் ஈடுபட்டுத் தாம் அறிந்து சுவைத் ததை மக்கள் எல்லோரும் அறிந்திட வேண்டும். அனை வருமே பயன் பெற வேண்டும் என்று எண்ணமிட்டார்.
- தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்’ என்னும் பெரு நோக்குடன் திருக்குறளார் திருக்குறளை மக்கள் விரும்பி ஏற்கும் வகையில் விளக்கமாகக் கூறலானார். அதிலும் சிறப்பாக நண்கச் சுவையுடன் கலந்து தரலானார். யாரும் முயலாத முறையில் எவராலும் இயலாத வகையில் இவருக்கு மட்டுமே கைவந்த ஒர் அரிய வாய்ப்பாக அமைந்து விட்ட புதுமை பாராட்டுக்குரியதாகும்.
அதன் வழியே இந்தியப் பாராளுமன்ற உறுப்பின ராகவும் பணியாற்றினார். திருக்குறள் பரப்பும் பணி ஒன்றினையே தமது தலையாய தொண்டாகக் கொண்டு நாற்பது ஆண்டுகட்கும் மேலாகச் செயலாற்றி வருகின் றார். -- - திரு. செ. அரங்கநாயகம், முன்னாள் கல்வி அமைச்சர்.