25
25
'இப்போது விளக்கமாகச் சொல்லுகிறேன், கேட்டுக் கொள் தம்பி! ஊக்கம் உடையவர்கள் எக்காரியத்தையும் துணிவுடன் திறமையாகவும் வெற்றியுடனும் செய்து முடித்துவிடுவார்கள். ஆனால், அவர்களிடம் ஒரு குணம் சில சமயங்களில் காணப்படும். இக் குணத்தைக் கண்டு சிலர் ஒன்றும் புரியாமல் ஏமாந்துவிடுவார்கள். அதுதான், அவர் கள் சில சமயங்களில் அடங்கி ஒடுங்கி இருப்பதுபோல் இருப் பார்களாம்.” "ஏன் அண்ணா! அப்படி அடங்கி ஒடுங்கிப்போய் இருந் தால் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள் என்றுதானே நினைப்பார்கள்? அதுதான் இல்லை தம்பி! அதுதான் இல்லை. ஊக்கம் உள்ளவர்கள் அப்படி இருந்துவிட்டால், அடங்கி ஒடுங்கிப் போய்விட்டார்கள் என்பது அர்த்தமல்ல. அவர்கள் ஏதோ திட்டம் போட அப்படி இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். எதிரிகளைப் பலமாக அடித்து வெற்றி பெற நினைத்து திட்டம் போட்டுக்கொண்டு இருப்பார்கள். அடங்கி ஒடுங்கி இருப்பது பயத்தினால் அல்ல. ஊக்கமுடை யவர்கள் இப்படித்தான் சில நேரங்களில் இருப்பார்கள். நீ, பார்த்தாயே, இப்போது சொல் தம்பி! அந்த ஆட்டுக் கடாக்கள் கால்களைப் பின்வாங்கிப் போனது எதற்கு? தெரிந்தது அண்ணா! ஆட்டுக்கடாக்கள் கால்களைப் பின்வாங்கிப்போனது, அதிக பலமாகத் தாக்குவதற்குத் தான். ஒடிவிடுவதற்கு அல்லவே!" 'இப்போது புரிந்திருக்குமே தம்பி! ஊக்கம் உடைய பெரியவர்கள், சில நேரங்களில் அடங்கி ஒடுங்கி இருப்பது எதற்கு என்று! குறட்பாவை எழுதிக்கொள் தம்பி! சொல்லு கிறேன். - - ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து.