உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29

வைத்துக்கொள் தம்பி! கும்பலாக இருந்துகொண்டுதான் சாப்பிடும்.” இது மிகமிக மேலான குணம் அண்ணா! குறித்துக் கொண்டேன். அடுத்த குணத்தைச் சொல்லுங்கள்.” அடுத்த குணம் இருக்கிறதே தம்பி அது நம்மை மிகவும் கவர்ந்துவிடுகின்ற குணம். தன்னுடைய இனம், சாப்பிடு வதற்குத் தாமாகவே வரட்டும் என்று காத்திருக்காது. இதுவே சத்தம்போட்டு தன் இனத்தைக் கூப்பிடும். கூப்பிட்ட பிறகுதான் மற்ற காகங்கள் எல்லாம் வந்து சேரும். எவ்வளவு ஒப்பற்ற குணம் பார்த்தாயா தம்பி!’ ஆம் அண்ணா! ஒப்பற்ற சீரிய குணம் என்றால் இது தான் அண்ணா! தனக்கு இரை அகப்பட்ட உடனே தானே தன்னுடைய இனத்தார்களைச் சுற்றத்தாரைக் கூவி அழைத்துவிடுகிறது. அதுகூட, ஒருமுறை சத்தம்போட்டு நிறுத்துவது இல்லை அண்ணா பல முறை சத்தம் போட்டு கூப்பிடுகிறது.” - 'தம்பி! காகம் கத்துகிறது என்று சொல்லுவது கூடாது. காகம் கரைகிறது என்று சொல்லவேண்டும். தெரிகிறதா?” தெரிந்துகொண்டேன் அண்ணா! காகம் கரைகிறது என்று சொல்லவேண்டும். குயில் கூவுகிறது என்று சொல்ல வேண்டும். குதிரை கனைக்கிறது; நாய் குரைக்கிறது என்று இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நான் முன்பு படித் திருக்கிறேன் அண்ணா!' - "சரி, காகத்தின் மற்றொரு நல்ல குணம், மறைத்து வைத்து சாப்பிடத் தெரியாது.” ஆம் அண்ணா! தனக்குக் கிடைத்ததை மறைவாகவே காகம் சாப்பிடுவது இல்லைதான். அதுதான் உடனே தன் னுடைய சுற்றத்தார்களைக் கூப்பிடுகிறது. மறைத்து