உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 பானையிடம் காணும் சிறப்பான பண்பு இச்சிறப்பான பண்பு யானையிடம் இருப்பதாகும். பெருமையினை நிலைநிறுத்துவதைக் குறியாகக் கொண்டிருப்பது யானையாகும். கட்டாகிய அம்பி ஆனால் கிறையப் புண்பட்டுவிட்டதே என்று களிறு மனத்தளர்ச்சியடைந்து மயங்கி ஓடிவிடாது. களிறு என்பது யானையாகும். நினைத்த எண்ணத்தினை நிலைநிறுத்த யானை முயன்று விற்கும். இக்கருத்தினை, புதையம்பில் பட்டுப்பாடு. ஊன்றும் களிறு என்று முடிகின்ற குறட்பா ஒன்று கொடுமையான துன்பம் உண்டாகின்றது என் :பதனைப் புதையம்புபட்ட காலத்திலும் என்பதால் உணர்த்தப்பட்டது. அப்படிப்பட்ட துன்பமும் அயானைக்கு மனத்தளர்ச்சியினை உண்டாக்கிவிடாது. அப்படிப்பட்ட காலத்திலேயும் யானை தளர்ச்சியடை .யாமல் பெருமையினையே நிலை கிறுத்தும் என்ற கருத்தினை பாடு ஊன்றும்’ என்ற சொற்களால் ஆசிரியர் அமைத்துக் காட்டினார். - - எடுத்த காரியத்தினைத் தவறாமல் முடிக்க வேண்டும் என்கிற உறுதிப்பாடு குறிப்பால் உணர்த்தப் :பட்டது. அம்பு பட்ட உடனே அஞ்சி ஓடுகின்ற இயல்பு பொதுவாக எல்லா விலங்கினங்களிடத்தும் காணப்படுவதாகும். ஆனால் யானையின் பண்போ அப்படிப்பட்டதல்ல. அதனிடம் மனத்தளர்ச்சி என்பது இல்லை. அதனால்தான் புதையம்புபட்டும் பாடு ஊன்றும், என்று மிகச் சிறப்பாகக் கூறி வைத்தார். இவ்வளவு