உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Ü 1 சிதைவு வரினும் சீரின் குறையார் இத்தகைய மிகச் சிறந்த பண்புடையவர்களுக்குப் பெருமையுடைய களிறு உவமையாகக் காட்டப்பட்டது. வாழ்க்கைப் பாதையில் சிதைவு வரக்கூடும் என்கின்ற குறிப்பினையும் அறிதல் வேண்டும். அவ்வாறு சிதைவு வந்த காலத்தில் வாழ்க்கையினைச் சீரயழியச் செய்து விடுதல் உயர்ந்த மக்கட் பிறவிக்கு ஒத்தது ஆகாது. ஊக்கம் இல்லாதவர்களே சிதைவிற்கு இடம் தருவார்கள்; அழிவுத்தன்மை மன எழுச்சியுள்ளவர் களை ஒருக்காலும் பாதித்து விடாது. எனவேதான், விலங்கினத்தைச் சேர்ந்ததேயானாலும் பெருமையினை நிலை நிறுத்தம் யானை யி னை அதனுடைய பண்பினைக் கருதி நாமும் ஒத்திருக்க வேண்டும். குறட்பா விளக்கிக் கூறும் தன்மை சிறந்து விளங்கு கின்றது. - * * - - சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்பட்டுப் பாடுன்றும் களிறு'. இக் குறட்பா துன்பத் திலும் பெருமையினை நிலைநிறுத்தும் நுட்பமான கருத்தினை வெளிப்படுத்திற்று. இன்பத்தில் பெருமை யினை நிலைநிறுத்துவது எளிதான ஒன்று. ஆகும். இன்பத்தில் மன எழுச்சி கொண்டிருப்பது பெரு மையான செயலன்று. சிதைவு வந்த காலத்தில் அச் சிதைவுக்கு இடம் தராமல் மனத்தினைத் தளர்ச் சியில் விடாமல் எழுச்சி கொண்டு மேம்பாடு அடைவதே மனிதப் பண்பாட்டின் வளர்ச்சியாகும். - முயற்சியை மேற்கொண்டு தொழிலினைச் செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புபவர்களே சமுதாயத் திற்கு ஊன்றுகோல் போன்றவர்களாவார்கள். தொழி வ.-7 х -