உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 என்பதனை நான்கு முறை அடுத்தடுத்துக் குறிப்பிட்டு அழகிய குறட்பா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உஇடும்பைக்கு இடும்பை" படுப்பர் இடும்பைக்குஇடும்பை படா அதவர். c - துன்பம் என்பதனை எவ்வளவு எளிதாக ஒழித்து விடுதல் வேண்டும் என்பதனை வற்புறுத்திக் கூறினார். துன்பத்திற்கே துன்பம் கொடுக்க முடியும் என்பதன்ை யும் எடுத்துக் காட்டினார். அதற்குள்ள ஒரே வழி துன்பம் வந்தபொழுது அத்துன்பத்தினைக் கண்டு துன்பப்படாதிருக்கும் மன உறுதியேயாகும். - - - மனப்பக்குவம் வாழ்க்கைப் பாதையில் எல்லாக் காலங்களும் நல்லதாகவே இருந்து விடும் என்று எண்ணுதல் கூடாது என்கின்ற உண்மை மெய்ப்பிக்கப்பட்டது. எதிர்பாராத நிலையில் துன்பம்கூட வந்துவிட்டதே என்று எண்ணி மலைத்தலும கூடாது. துன்பங்களை யெல்லாம் இயல்பானதாகவே எண்ணி வருந்தாத மனப் பக்குவத்தைப் பெற்று அவைகளைப் போக்குவதே மனிதப் : பிறவியிடம் காணப்பட வேண்டிய சிறப்பாகும். அளவு கோல் வைத்து அளவிட்டுக் கூற முடியாதது துண்பமாகும். துன்பத்தினை இடுக்கண்' என்று கூறுதலும் உண்டு. இடுக்கண்’ என்பது குறிப்பிட்ட ஒன்று இரண்டு போன்ற எண்ணிக்கையில் வருவது அல்ல. இடுக்கண் வருகின்ற காலத்தினையும் கண்க்கிட்டுக் கூறுதல் இயலாது. ஒரே இடுக்கண் பலமுறை வருதலும் கூடும். -