உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 09 என்று கூறினார். அதாவது மனத்திட்டத்தினால் உள்ளத்தின் கோட்பாட்டினை அழிக்காமல் இருப்ப வனிடம் வந்த துன்பம் என்பதே குறிக்கப்பட்டது. க.அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற-இடுக்கண் இடுக்கட் படும். - - - - தொடர்ந்து வருதல் இடும்பைக்குண்டு அடுக்கடுக்காய் துன்பங்கள் வருவதுண்டு என் கின்ற உண்மையினை வைத்தே குறட்பாவும் அடுக்கி வரினும் என்று தொடங்கிற்று. இயற்கை என்று கூறப்படுகின்ற ஊழ்வினையால், கொடுந்துன்பங்களும் ஆழ்ந்து வரும். அக்காலத்திலும் மன ஊக்கத்தினை முதன்மையாகக் கொண்டு உள்ளத்தினை எழுச்சியுடன் கிலைநிறுத்தல் வேண்டும். - - - வந்த இடுக்கண் தானே இடுக்கண்பட்டு விலகும். என்று கூறியதால் மனத்திட்பம் கொண்டவனை எத் துன்பமும் எக்காலத்திலும் அழித்துவிடாது என்ற மேலான உண்மை உறுதியுடன் கூறப்பட்டது. தாங்க முடியாத துன்பங்கள் வந்து அழித்துவிட்டன என்று கூறப்படும் உலகியற் பழக்கத்தினையும் விளக்கிக் கூறி அதற்கு மருந்தான உண்மையினையும் எடுத்துக் காட்டினார். - மனத் திடம் பெற்றுள்ள மனிதனால் மிகச் சிறந்த செயல்களையெல்லாம் ஆற்றுதல் கூடும் என்கின்ற துட்பம் சூழ்ந்த கருத்துடன் கூறப்பட்டது. பல துன்பங்கள் வருமேயானால் தாங்கமுடியாத நிலை ஏற் பட்டுவிடும் என்று கூறுதல் அறியாமையேயாகும் .