உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 கான்கினையும் ஒன்று சேரக் கூறி இவைகளில் ஒரு குணம் ஒருவரிடத்தில் த்ொடக்கத்தில் இருந்தாலும் மற்ற மூன்று குணங்களும் வந்து சேர்ந்துவிடும் என்ற உண்மை குறிப்பால் உணர்த்தப்பட்டது. மரக்கலம் மக்கட்பிறவியினைக் கடல்’ என்று கூறுதலும் உண்டு. பிறவிப் பெருங்கடல் என்றும் அமைத்துக் காட்டப்படும். வாழ்க்கை என்பது கடலில் பயணம் செல்வது போன்றது என்று குறிப்பிடப்படுவது மிகை யாகாது. அப்பயணத்தில் கெட்டுப்போன மரக்கலத்தை துணையாகக் கொண்டவர்கள் எந்த முடிவுக்கு வருவார் கள் என்பது சுட்டிக் காட்டாமலே தெளிவுறுவதாகும். தீய குணங்களை அகற்றாதவர்கள் வாழ முடியாது. வாழ்வார்களேயானால் அழிவினைத் தேடிக் கொள் வார்கள். - , -- - | விரிவாக விளக்கிக் கூறவேண்டியவை அல்ல என்பதே பொருந்தும். மறதி என்கின்ற குணத்தினைப் பொச்சாப்பு என்று ஆசிரியர் குறிப்பிடுவார். தீய குணங்களிலே மிகக் கொடியது மறதி என்று கூற லாம். இக்குணம் கினைவு ஆற்றல் என்பதற்கு முற்றி லும் பகைமையானதாகும்; மாறுபட்டதாகும். கினைவு ஆற்றல் பெற்றிருப்பவர்கள் உலகில் சறந்து விளங்குவார்கள், புகழ் பெற்று வாழ்வார்கள். கல்வி, கேள்வி, அறிவு இவைகளையெல்லாம் சேமித்துப் பாதுகாத்து வைக்கும்பெட்டகம் போன்றது கினைவு ஆற்றலாகும். வ.-8