உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 * ஆனால் ஆசிரியர் கூறிய இக்கருத்தோ அப்படிப் பட்டதல்ல என்பதை மிக நன்றாகக் கூறக் கருதியே உலகத்திலுள்ள எல்லா நூலாசிரியர்களையும் வரிசைப் படுத்திக் காட்டி இக்கருத்தினை மெய்ப்பித்தார். பொச்சாவாமை என்பது மறதியின்மை என்பதைக் குறிப்பதாகும். தொழில் செய்பவர்கள் பொச்சாவாமை என்கின்ற மறதியின்மையினை மிகவும் சிறந்த கருவி யாகக் கொள்ளுதல் வேண்டும். இக்குணத்தினை ஒரு கருவியாகவே ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

கினைப்பும் மறப்பும் மனத்தினிடம் தோன்றுவன வாகும். ஆதலினால்தான் மனமே கருவியாகக் கொள்ளப்பட்டது. இடைவிடாத நினைப்பும் தப்பாத எண்ணமும் கினைத்த செயல்களை வெற்றியடையச் செய்வத்ாகும். - - அருமையானவை எளிதில் முடியும் தொழில்களை மேற்கொள்ளும்பொழுது அருமை யான காரியங்கள் என்று சொல்லப்படுபவைகளும் உண்டு. முடிக்க முடியாத காரியங்கள் என்று கூறக் கூடிய பழக்கங்களையும். உலக இயல்பில் காணு கின்றோம். அப்படிக் கூறவேண்டிய நிலைமை கினைவுஆற்றல் உள்ளவர்களுக்கு இருக்காது.நினைவு ஆற்றல் பெற்றவர்கள் அருமையான செயல்களை யும் எளிதில் முடிப்பார்கள். - - அவர்கள் பொச்சாவாக் கருவியினை போற்றிச் செய்தல் வேண்டும். பொச்சாவாக் கருவி என்பது மறதி