உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மக்களிடையே இருக்கின்ற பொதுப் பண்பாகும் என்பது கூறப்பட்டது. இகழ்ந்து பேசுகின்ற ஒருவனே சிறப்பித்துப் பேசுவான் என்பது குறிப்பாகும். உலகியல் வழக்கம் எல்லாத் தீமைகளையும் ஒருவன் உடையவனாக இருந்தாலும் அவனிடத்தில் பொருட் செல்வம் இருந்து விடுமேயானால், எல்லோரும் அவனுக்குச் சிறப்புச் செய்யச் செல்வார்கள் என்பதாகும். ஒருவனிடத்தில் எல்லாவிதமான தன்மைகளும் இருந்தாலும் அவனிடத். தில் பொருட் செல்வம் இல்லாதிருக்குமானால் அவன் எல்லாருடைய இகழ்ச்சிக்கும் ஆளாக வேண்டிவரும். சிறப்பு’ என்பதனைப் பொருட் செல்வம் ஒருவனுக்கு உண்டாக்கித் தரும். எல்லாரும் என்று. கூறியதால் பொதுமக்கள் என்று மட்டும் கொள்ளாமல் உற்றார், உறவினர், சுற்றத்தார் என்றும் கொள்ளுதல் வேண்டும். ஆதலால்தான் பொருள் செய்து வாழ்தல் வேண்டும் என்பதனை ஆசிரியர் வள்ளுவனார் மிகவும். வற்புறுத்திக் கூறுகின்றார். பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை. யென்றும் எடுத்துக்கூற ஆசிரியர் தயங்கவில்லை. பொரு எரி ல் லா த வர்களை வறியவர்கள் என்றே கூறுவார்கள். வறுமையாளர்கள் இகழ்ச்சிக்கு, ஆளாகுதல் இயல்பானதாகவே முடியும். - சிறப்புச் செய்தல் என்பது பொருள் பெற்று. இருப்பதனால் ஏற்படும் பயனாகும். பொருளுடையவன் தான் விரும்பாவிட்டாலும் மற்றவர்களே வலியவந்து சிறப்புச் செய்தலைப் பெறுபவன் ஆகின்றான்.