உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 ஒழுக்கம் குறைந்து அழிபவன் மீண்டும் அருள்பெறுதல் முடிய ாததாகும். - - அத்தகைய பெருமை வாய்ந்தது அருட்செல்வ மாகும். பெருமை நிறைந்த அருட் செல்வத்தின் பெருஞ் சிறப்பினைத் தெளிவு படுத்துவதற்காகவே பொருட் செல்வத்தினை முன் வைத்துக் காட்டினார். பொருட் செல்வத்தை கன்கு ஈட்ட வேண்டியதும் காக்க வேண்டியதும் இன்பம் நுகர வேண்டியதும் குறிப்பால் உணர்த்தப்பட்டன. பொருளில்லாமல் வாழ விரும்புதல் தவறு என்பதும் ஊன்றி உணரப்பட வேண்டியதாகும். - பொருளில்லாதவர்கள் இவ்வுலகில் வாழ வேண்டும் என்று எண்ணுவதே தவறு என்று கூறுதல் மிகை யாகாது. அதனால்தான் பொருளின் சிறப்பினை எத்தனை வழிகளில் கூறமுடியுமோ அத்தனை வழிகளிலும் சிறப்பாக அமைத்துக் கூறினார். - அருள் உள்ளவர்கள் எல்லா உயிர்களின் மேலும் கருணை செலுத்துவார்கள் என்று கூறுவதைப் போல பொருட் செல்வமுடையவர்கள் அச்செல்வத்தினால் எல்லோராலும் சிறப்புச் செய்யப் பெறுவர் என்பதும் குறிப்பாயிற்று. - - பொருளினைக் காத்தலும் ஈகையும் ஆதலால்தான் பொருளினைச் செலவு செய்வது எவ்வாறு என்ற குறிப்பில் ஆசிரியர் பொருளினைக் காப்பாற்றும் வழியினைக் கூறுகின்றார். பொருளு டையவர்கள் பண்பு நிறைந்தவர்களாகவும் அறம்