உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 தன்னிடமுள்ள பொருட் செல்வத்திற்கு ஏற்றவாறு அளவுடன் ஈகையினைச் செய்யாதவன் அறிவில்லா தவனே யாவான். அளவறிந்து ஈக’ என்றொரு கருத் தினைக் குறட்பா ஒன்று சிறப்பாகக் கூறுகின்றது. அளவு என்று கூறுகின்றபொழுது ஈகைத்தன்மை - யினால் பொருளினைப் பிறர்க்கு அளிக்கும் அள வினையே கூறுகின்றார். பொருள் வைத்திருப்பவர்கள் அளவுக்கு மீறி ஈதல் கூடாது. பொருட்செல்வத்தினை சுருக்கமான செலவினால் காத்து வருதல் வேண்டும் என்கின்றார். - அப்படிச் செய்வதனால் பொருட் செல்வம் தன்னை விட்டு நீங்காது என்பதாகும். பொருளினைப் போற்ற வேண்டும்’ என்பதற்குப் பொருளாக விளக்கம் கூறு கின்ற பொழுது, அளவறிந்து செலவு செய்தலையே கூறுகின்றார். பொருள் போற்றி வழங்கு நெறி என்பதைக் கூறிக் குறட்பா ஒன்று முடிகின்றது. ஈகை செய்க பொருளினைக் காப்பாற்றிக் கொண்டு கடக்க வேண்டிய வழி என்னவென்று விளக்கம் தருகின்ற இடத்தில் அளவறிந்து ஈகை செய்தலே அந்த வழி யாகும் என்றுதெளிவாக்குகின்றார். பிறருக்குக் கொடுக் கும் தன்மையினை ஆசிரியரும் பாராட்டியே கூறுவார். ஆனால் அந்த முறை அளவுடன் இருத்தல் வேண்டும். ஆற்றின் அளவறிந்து ஈக என்பது குறட்பாவின் முதற் பகுதியாகும்.