உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 73 காட்டக்கூடிய மனம் படைக்காதவர்களே கயவர்கள் ஆவார். ஈர்ங்கை விதிரார்' என்ற சொற்களினால் இவர்களுடைய கீழ்மையான மனத்தினை ஆசிரியர் எடுத்துக் கூறுகின்றார். சாப்பிட்ட பிறகு கையில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடிய பருக்கைகளைக் கூடக் கொடுக்க மன மில்லாதவர்கள் என்பதே இதன் கருத்தாகும். - இப்படிப்பட்டவர்கள் செல்வம் பெற்றிருந்தால் காட்டுக்கே தீங்கு என்பது பொருள்ாகும். இப்படிப்பட்ட கயவர்களும் கொடுக்கும்படியான நேரத்தினையும் உண்டாக்குதல் முடியும். - அதாவது கைகளை முறுக்கிக் கயவர்களின் கன்னத்தில் பற்கள் உடைபடும்படி அடிப்பவர்களுக்குக் கயவர்கள் பொருள் கொடுப்பார்கள். கீழ்ப் பிறவி களாகிய விலங்கினங்களிடம் வேலை வாங்க வேண்டு மென்றால் அவைகளை அடித்து வேலை செய்ய வைத்தல் உண்டு. அந்த நிலையிலேயே கயவர்களும் வைக்கப்பட்டுப் பேசப்படுகிறார்கள். - கொடிறு உடைக்கும் கூன்கையர்' என்ற ஒரு தொடரினை ஆசிரியர் வள்ளுவனார் குறிப்பிடு கின்றார். கைகளை முறுக்கிக் கன்னத்தில் அடித்து நொறுக்குகின்றவர்கள் என்பதே விளக்கிக் காட்டப் பட்டது. அப்படிப்பட்ட மக்களின் செயல்கள்தான் கயவர்களைப் பணிய வைக்கும். * . . . . மக்கள் கூட்டத்திலிருந்து வருகின்ற கயவர்களைப் அபுரிந்து கொள்ளுதல் வேண்டும். புரிந்து கொண்டால்