உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. அரங்ககாயகம், மாண்புமிகு முன்னாள் கல்வித்துறை அமைச்சா மதிப்புரை ஐம்பது ஆண்டுகட்கு முன்னால் திருக்குறள் பெரும் புலவர்களிட்ம் மட்டுமே அறிமுகமாகியிருந்தது. கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்த புலவர்களும் திருக்குறள் படித்தவர் என்று தம்மைக் கூறிக்கொண்டு பெருமை பெற்று வந்த நிலையை நாம் அறிகிறோம், புலவர்க்கெல்லாம் புலவராக விளங்கிய ஒரு சிலர் மட்டுமே திருக்குறளின் தெளிந்த அறிவை உணர்ந்தவராக விளங்கியிருக்கின்றனர். புலமை பெற்றவர்களுக்கே புலப்படாத திருக்குறளின் உண்மைக் கருத்துக்கள் பொதுமக்களுக்கு எட்டவே முடியா மல் இருந்தன. உலகப் போக்கில் பல துறைகளிலும் பொது மக்கள் காலம்" உருவாகியது. அரசியல், அறிவியல், வாழ்வியல், கல்வித்துறை, தொழில்துறை, கலைத்துறை எனும் அனைத் திலும் பொது மக்களின் காலம்" உருவாயிற்று. இந்த இயற்கை போக்கை ஒட்டித் திருக்குறள் கருத்துக்களும் பொதுமக்களுக்கு உயர்த்தப்பெற்றது. அதற்கு ஒருவர் சிறப் பாகத் தோன்றியுள்ளார்: அன்னார் பெயர் திருக்குறளார் வீ. முனிசாமி என்பதாகும். - திருக்குறளார் வீ. முனிசாமி அவர்கள் தமது இளம் வயதிலேயே திருக்குறளில் ஈடுபட்டுத் தாம் அறிந்து சுவைத் ததை மக்கள் எல்லோரும் அறிந்திட வேண்டும், என்று எண்ணமிட்டார். *தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் பெருநோக்குடன் திருக்குறளார், திருக்குறளை மக்கள் ஏற்கும் வகையில் விளக்கமாகக் கூறலானர். திருக்குறளையே வாழ்க்கையாகக் கொண்டு சிந்தனை, சொல், செயல் என முழுமையாக ஏற்று மக்களுக்குத் தினந் தோறும் திருக்குறள் கருத்துக்களை எடுத்துச் சொல்லி, பரவலாகத் திருக்குறளைப் பரப்பி வருகிற திருக்குறளார், தமிழறிஞர் அனைவராலும் பாராட்டப் பெறுகிறார். அரிய பெரிய தமிழ்த்தொண்டு புரியும் அறிஞர் திருக்குறளார் வீ. முனிசாமி அவர்கட்குத் தமிழுலகம் கடமைபட்டுள்ளது; அவர் தொண்டு மிகப் பெரியது; அவரைப் போற்றிப் பாராட்டுகிறேன்.