இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வள்ளுவர் கோட்டம் 119 கவியரசர் முடியரசன்
பழியிறங்காப் பண்புபெற முனைவாருண்டு பண்பழித்துப் பழியிறங்க நினைவாரில்லை; விழியுறங்கும் வேளையிலும் பயில்வாருண்டு விழித்துவிட்டு நடுப்பகலில் துயில்வாரில்லை; பழிதவிர்ந்த கலையறிவைத் தெரிவாருண்டு பகுத்தறிவைப் பாழ்படுத்தித் திரிவாரில்லை; மொழிவிளங்கும் நூலறிவைக் கற்பாருண்டு மூளைதனைப் பிறமொழிக்கு விற்பாரில்லை. o o o o o