பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

95

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 8 95 ைகவியரசர் முடியரசன் - - நல்வாழ்வை அடைவதற்கு விழையும் மாந்தர் நடத்திவரும் பயணத்தில் தொடர்ந்து செல்லப் பல்வேறு வழியுண்டு; சான்றோர் செல்லும் பண்பட்ட ஒர்வழியுண் டிடப்புறத்தே செல்வாரும் அதைவிடுத்து வலப்புறத்தே செல்வாரும் காட்டுகிற வழிகள் உண்டு; பொல்லாத குறுக்குவழி ஒன்றும் உண்டு; பொய்யான இருட்டுவழி ஒன்றும் உண்டு. காரிருளில் வழிநடக்க விழைதல் வேண்டா, கதிரவனார் காட்டுகிற வழியே செல்க, பேரிருளிற் கொண்டுய்க்கும் வழிகள் வேண்டா; பெரும்புலவன் வள்ளுவன்சொல் வழியே செல்க, ஈரமிலாச் சுடுமணலில் செல்ல வேண்டா, இருபுறமும் பொழில்சூழும் வழியே செல்க, கரறிவுக் கண்ணுடையார் விழியை முடிக் குழிவிழப் பார்ப்பாரோ? கொடுமை யன்றோ? குறள்விழா, காரைக்குடி 25.1.1976.