பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பும் அறமும் 27 தாற் போலும். எலும்பு இல்லாத உடம்பையுடைய புழுவைக் கதிரவன் வெப்பம் காய்ந்து வருத்துவது போல, அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும். இம்மையிலும் மறுமையிலும் இன்ப வாழ்க்கைக்கு அடிகோலுவது அன்பே. உற்ற இடத்து உயிர் வழங்கும் உத்தம நட்பாளரைப் பெறுதற்கும் இவ் அன்பே உறுதுணையாக அமையும். அன்பிலாதவர் ஒன்ருனும் பிறர்க்கு உதவ மாட்டார். எல்லாப் பொருளையும் தமக்கே உரிமை யாகக் கொண்டு வாழ்வர். அன்புடையார் அனைத்தை பும் பிறர்க்கே உரிமையாக்கிப் பெருமையுடன் வாழ் வர். அன்பே உருவாய்த் திகழ்ந்த பெருவள்ளல் ப்ரி, ஓரறிவுயிராகிய முல்லைக் கொடிக்கும் பேரருள் சர்ந்தான் தனது மணித் தேரை அதற்குப் பற்றிப் படரும் கொழுகொம்பாய் நிறுத்திவந்தான். பேகன் என்னும் பெருவள்ளல், தனது மலேச்சாரலில் குளி ரால் நடுங்கியொடுங்கி நின்ற தோகைமயிலைக் கண்டு உள்ளம் கனிந்தான் ; தான் போர்த்தியிருந்த விலை உயர்ந்த பொன் மயமான போர்வையை அம்மயிலுக் குப் போர்த்து அகம் குளிர்ந்தான். தன்னே அடைக் கலம் அடைந்த குறுநடைப் புறவின் உறுதுயர் நீக் கச் சிபி என்னும் செங்கோல் மன்னன், தன் உடிம்பையே உவந்து கொடுத்தான். தேவர்கட்குத் தீங்கிழைத்த விருத்திராசுரனே அழித்தொழிக்கத் ததிசி என்னும் தவமுனிவன், அத் தேவர்கள்பால் கொண்ட அன்பால் இந்திரனுக்குத் தனது முது கெலும்பை ஈந்து உயிர்நீத்தான். இங்கனம் அன் புடையார் பலர், பிறர்க்கு என்பும் உரியராய் விளங்கி இன.ா.