பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தும் மருத்தும் 35 இல்லறவியலில் அன்பினே அடுத்து இவ் அறத்தையே உரைத்தருளினர். இல்லிருந்து பல்பொருளை ஈட்டி வாழ்வதெல்லாம் விருந்தோம்புதற் பொருட்டே என்று தெரிந்துரைத்தார். விருந்தினரைப் பேணுத இழிந்த செயல், செல்வம் இருந்தும் வறுமை யென்றே கூறத் தகும். வீட்டிற்கு வந்த விருந்தினர் வெளியே இருக்கத், தான் உள்ளே சென்று தனித்து உண்பது அமிழ்தமேயெனினும், அச் செயல் விரும்பத்தக்கது அன்று என்று விளம்பினர். விருந்தோம்பலின் சிறந்த பயனைக் கூறவந்த செங்காப்போதார், பல பாக்களில் விதந்து ஒதுகின் முர். காள்தோறும் கல்விருந்து ஊட்டுவான் வாழ்வு வறுமையோ சிறுமையோ அடைவதில்லை. அவனது இல்லத்தே திருமகள் உள்ளம் விரும்பி உறைவாள். அவனது விளேபுலத்திற்கு வித்தும் இடுதல் வேண்டா அவன் மறுமையில் வானவர் விருந்தினய்ை வளம் பெற வாழ்வான். ஆகவே, விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று வரையறுத்துக் கூற இயலாது என் பார் தெய்வப் புலவர். இவ் அறத்தைப் பேணுவார்க்கு மூன்று பண்பு கள் இன்றியமையாது அமைதல் வேண்டும். அவை மலர்ந்த முகம், இன் சொல், நன்முற்றல் என்பன. இல் லறத்தான் விருந்தினரைச் சேய்மையில் வரக்கண்டால் மலர்ந்த முகம் காட்டி வரவேற்றல் வேண்டும். அது பற்றி நெருங்கியபோழ்து அன்போடு இன்சொல் வழங்குதல் வேண்டும். இவ் இரண்டன் காரணமாக விருந்துண்ண இசைந்தபோழ்து இனிது உபசரித்து கணிசுவை உணவினை ஊட்டுதல் வேண்டும்.