பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வள்ளுவர் சொல்லமுதம் என்று உரையாத இதயம் அளித்தருள் என்று கண்ணன் பால் வரம் வேண்டின்ை. கண்ணனே மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு மனமலர் உகந்து இனிதருள் புரிந்தான். அவன், கன்னன் விரும்பிய கனிந்த இதயம் ஒன்றுமட்டும் வழங்கி.ை னில்லே. * . எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி . முத்தியும் பெறுதி முடிவில்என்(று) உரைத்தான் மூவரும் ஒருவளும் மூர்த்தி’ என்ற வில்லியின் சொல்லில் கண்ணபிரானுடைய கருணை உள்ளம் இனிது விளங்கக் காணலாம். ஈகை உள்ளம் இருந்து பயனில்லே அவ் அறத்தை ஆற்று தற்குச் செல்வமும் வேண்டும் என்பதை நினைந்தருளிய கண்ணன், கன்னனுக்கு ஈகையும் செல்வமும் எய்துக" என்று வரம் அளித்தருளினன். செல்வர்க்கு அழகு செழுங்கிளே தாங்குதல் என்பர் அதிவீரராமர். தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐம்புலத்தையும் செல்வர் ஒம்புதல் வேண்டும். தானும் துய்க்காது பிறர்க்கும் வழங்காது பொருளைப் புதைத்துவைத்து இழக்கும் புல்லர்களே என்னென்று சொல்லுவது | கொடுக்கறியாது இறக்கும் குலாமருக்கு என்சொல்லு வேன்' என்று இரங்குவார் பட்டினத்தடிகள். பணம் இல்லாதவன் பிணம் என்பது பழமொழி. பணம் இருந்தும் மணம் பெற மகிழ்ந்து வாழாதவனும் பிண மென்றே பேசுவர் பெருகாவலர். மேலும் ஈயாத உலோபிக்கும் பேய்ப்பிறப்பே உளதாகும் என்பர். பொருளை ஈட்டுதலையே விரும்பி இசை வேண்டாத