பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்பும் பக்ையும் ?甚 முக்காரணத்துள் எக்காரணத்தால் நட்பு ஏற்படு மாயினும் அத் நட்பால் இன்பம் பெருகுவதும் துன்பம் அருகுவதும் இயற்கை நல்லவர் தட்பே என்றும் நலம் பயப்பதாகும். அதுவே மேன்மேலும் பெருகி வளர்வ தாகும். பண்புடையார் நட்பு, பிறை நிறையும் தன்மை போல நாள்தோறும் பெருகி வளரும், அதுவே கற்குந் தோறும் கற்ருர்க்கு இன்பம் வினைக்கும் அரிய நூலேப் போலப் பழகுந்தோறும் பெருகிய இன்பம் விளக்கும் என்பர். இக் கருத்துகளை நாலடியாரும் நயமுத விளக்கும். பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்-வரிசையால் வானுர் மதியம்போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடிர்பு' என்பது நாலடிப் பாடல். மேலும், கற்றறிந்தார் நட்பு, கருக்டை நுனியி: விருந்து தின் துதற்கு ஒப்பாகும் சிற்றினத்தார் நட்பு, கரும்பை அடியிலிருந்து தின்னுதற்கு ஒப்பாகும் என்று செப்பும் கரும்பை துணியிலிருந்து கறித்துச் சுன்வத்துக் கொண்டே வந்தால் அதன் சுவை பெருகுதலைக் காண் போம். அதனை அடியிலிருந்து கறித்துச் சுவைத்துவரின் இனிமை, செல்லச் செல்லக் குறைந்து வருதலைக் காண் போம். அஃதேபோல் நல்லவர் நட்புச் செல்லச் செல்ல ன்பம் சிறக்கும் ; அல்லவர் நட்புச் செல்லச் செல்ல இன்பம் சிறிதுமின்றித் துன்பம் பெருக்கும் என்று நாலடி நூல் நவிலும். - நட்பின் இலக்கணம் யாது? இதனைத் திருவள்ளுவர் தான்கு பாக்களில் நன்கு விளக்குகிருர், அன்புடைய தண்பரைக் கண்டபோது, அகமலர்ச்சியின்றி முக்மலர்ச்சி யொன்றே காட்டி நட்குமது நட்பு ஆகாது. அன்பால் அகமும் மலர நடக்குமதே தட்பாகும் என்பர். கேடு