பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ள்ைளுணரி சேர்ல்லமுதல்

  • கணித்ததைக் கைவிடுதல் கானக நாம்

விலங்கிற்கும் விள்ளல் அரிது’ என்று சொல்லும் நாலடி நூல். ஒருவனே நண்பளுக ஏற்றுக் கொள்ளக்கு முன் அவனது குணமும் செய் கையும் நல்லவோ அல்லவே என்பதைப் பலகால் ஆராய் தல்வேண்டும்; பல வழிகளால் ஆராய்தல் வேண்டும். அங் கனம் ஆராய்ந்து நட்புக்கொள்ளாவிடின் முடிவில் தான் சாதற்கு ஏதுவாய துன்பத்தை அந் நட்பே விளைப்பதாகும். தகுதியற்ற ஒருவனே நட்புச் செய்தால் பின்பு அவன் பகையாலேயே அழிய நேரும். ஆதலின் ஒருவனது குணம், குற்றம், குடிப்பிறப்பு. குறைவற்ற சுற்றம் இன்னவற்றை யெல்லாம் எண்ணி ஆராய்ந்தே நட்புக்கொள்ளவேண்டும் என் பார் வள்ளுவர். சுற்றப்பிணிப்புடையார் நண்பரோடும் பிணிப்புண்டு வருவராதலின் ஒருவனது சுற்றத் தொடர்பைப் பற்றியும் உற்று நோக்குதல் வேண்டும் என்று உரைத் தருளிளுர், ஒரு சிலர் நட்பைப் பொருள் கொடுத்தேனும் பெறு தல்வேண்டும் என்பார் திருவள்ளுவர். அத்தகையார் யாவர் ? சிறந்த குடியில் பிறந்து பழித்கஞ்சும் பண்புடை யார் நட்புப் பல நலம் விளைப்பதாகலின் அவர் விரும்புவ தொன் றனைக் கொடுத்தேனும் அன்னர் நட்பை அடை தல் வேண்டும். தாம் தகாத செயல்கள் செய்யக்கருதினுல் சிந்தை தொந்து வருந்துமாறு கூறி விலக்கியும், தகாத செயல்களைச் செய்தக்கால் பின்னும் செய்யாத வகையில் இடித்து உரைத்தும், தக்க தற்செயல்களேச் செய்யாதவழிச் செய்விக்கவும் வல்ல நல்லாரையும் ஒருவன் தானே நாடிப் பொருள் கொடுத்தாயினும் அவர் தட்பைப் பெறுதல் வேண்டும். வேறு சிலர் நட்பைப் பொருள் கொடுத்தேனும் விலக்குதல் வேண்டும். அன்னவர் யாவர் ? இன்பக் காலத்துக் கூடியும், சிறு துன்பம் சேர்ந்ததாயினும் அன்றே அகன்றும் செல்வாரது நட்பை அறவே