?数 ள்ைளுவர் சொல்லமுதம் இல்லை சீரிய ஒழுக்கம்' என்பது தமிழ் மூதாட்டியாரின் அமுத மொழியாகும். ஒருவன் மனத்தில் கொண்ட மறையை எல் லோர்க்கும் சொல்லுதல் தகாது. குடிப்பிறந்த சான் ருேர்பால் கூறிஞல் அவர்கள் தம் உள் ளத்தே கொண் டிருப்பான்றி மற்றவர்க்கு எந்நாளும் மறந்தும் உரையார். அறிவிலாக் கயவர் பால் மறையினைக் கூறின் அதனை எல்லோர்க்கும் பறையறைந்ததுபோலச் சென்று பகர்ந்து விடுவர். அவர்கள்பால் சொல்லிய மறை, பிறரிடம் பரவும் விதத்திற்குப் பழமொழி ஆசிரியர் கூறும் உவமை அழகுடையதாகும். பெருமலே நாட! பிரதிய லாகா அருகறையை ஆன்ருேதே காப்பர்-அருமறையை நெஞ்சில் சிறியர்க்கு உரைத்தல் பனையின்மேல் பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று' பெருங்காற்று வீசும் பொழுதில் பனை மேலிருந்து பஞ்சுத் துய்யினைப் பறக்கவிட்டால் சிறுபொழுதில் எங்கும் பறத்து பரவிவிடுமன்ருே அஃதேபோல் கயவர் பால் உரைத்த மறை கணப்பொழுதில் ஊரெங்கும் பரவிவிடும் என்ருர் முன்றுறையரையஞர். ஆதலின் சான்ருேர், கயவர்க்கு உரையார் மறை யென்றும் கட்டுரைத்தனர். மறை காவாக் கயவர் இயல்பை அறை பறைக்கு ஒப்பிட்டார் வள்ளுவர். அரசன் ஆணையை ஊரினர்க்கு அறிவிக்கும் ஒருவன் பறையினைக் கையில் தாங்கி ஒலி யெழுமாறு கொட்டியவண்ணம் பல இடங்களிலும் சென்று நின்று மக்களேத் திரட்டுவான். மக்கள் கூடியதும் செய்தியை எல்லோரும் தெரியச் சொல்லுவான். அதைப் போன்றே கயவர்கள் தாம் கேட்ட மறையினை
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/78
Appearance