உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவும் உணர்வும் 7. நண்பர், உதவி செய்தோர் ஆகிய அனைவரையும் துக்கந் தரும் தொடர்ச்சிகளென அறவே துறந்து விலகுவர். அவர்கள் அனைத்தையும் துறந்த பின்பு மிஞ்சியது வீடுபேறே என்று விளக்குவார் கவியரச ராகிய கம்பர். மக்களைக் குருக்கள் தம்மை மாதரை மற்று ளோரை ஒக்குமின் னுயிரன் னுரை உதவிசெய் தாரோ டொன்றத் துக்கமித் தொடர்ச்சி யென்று - துறப்பரால் துணிவு பூண்டோர் மிக்கது நலனே யாகி - வீடுபே றளிக்கு மன்றே.' என்பது அவர் கவியமுகமாகும். மதியமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர் உள்ளத்துறவு பூண்டு வள்ளம் பெருமான நாடி கின்ற காலத்தில் ஊரும் பேரும் உற்ருரும் பெற்ருரும் கற்ருரும் கற்பனவும் ஆகிய பற்றையெல்லாம் வேண் டேன் வேண்டேன். ! என்று வெறுத்துரைத்தார். குற்ருலத்தில் உறையும் கூத்தப்பிரானது குரைகழற் சேவடி யொன்றே பற்ருகக் கொண்டு நின்றர். கன்றைப் பிரிந்த பசுவைப்போல் அதனையே பற்றிக் கசிந்துருகி கின்ருர். அத்தகைய தமது துறவு நிலையைத் திருவாசகத்தில் அழகுற விளக்கியுள்ளார்.

  • உற்ரு ரை யான் வேண்டேன்

ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்ரு ரை யான்வேண்டேன் - கற்பனவும் இனியமையும்