உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வள்ளுவர் சொல்லமுதம் இன்னேரைக் குன்றி மணியன்னர் என்று குறிப் பிட்டார் திருவள்ளுவர். குன்றிமணி புறமெல்லாம் செம்மையும் மூக்கில் மட்டும் கருமையும் கொண்டு இலங்குவது. அதைப் போன்று அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்திருக்கும் கள்ளத்துறவினர் பலர் உளர் என்று கண்டார் திருவள்ளுவர். அதனல், 接 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து.' என்று மொழிந்தருளினர் அப் புலவர். நாகப் பாம்பு தன்னிடத்தே நஞ்சு இருப்பதை அறிந்து, தன்னைப் பிறர் காணின் கொன்முெழிப்பர் என்றெண்ணி மறைந்து வாழும் இயல்புடையது. நீரில் வாழும் பாம்பிடத்தே நஞ்சில்லேயாதலின் அஃது அஞ்சாது புறத்தே செல்லும். அதனையும் விளையாட்டாகக் கல்லால் எறிந்து கொல்லும் சிறுவரும் உளர். கண்ணுக்கு இனிய காட்சி கல்கும் காகப் பாம்பைப் போன்று நஞ்சனைய வஞ்சம் நிறைந்த நெஞ்சினராகிய பொய்த்தவர், தம்மைப் பொலிவுடைய தவக்கோலத்தால் அணிசெய்து கிற்பர். தாய உள்ளமுடையார் தம்மைத் தோற்றக் தால் மாற்றிக்கொள்ள விரும்பார். இந்த உண்மையை விளக்கும் தமிழ் மூதாட்டியாரின் அமுத மொழியைக் காணுங்கள. நஞ்சுடைமை தானறிந்து தாகம் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் ; கரவார் காவிலா நெஞ்சத் தவர்.” காவுடையார், தம்மைக் காத்துக்கொள்ளப்புறக் கோலம் தாங்கிச் செல்லும் புன்மையைப் பலர்பால்