க. நன்றியும் நடுவும் வள்ளுவர் தமது அறநூலுள் வகுத்துரைக்கும் அறங்கள் பலவற்றுள் நன்றி மறவாமையும் ஒன்ரு கும். இதனைச் செய்ங்கன்றியறிதல் என்னும் அதிகாரத்தால் சிறப்பாக விரித்துரைக்கிருர் அத் தெய்வப் புலவர். ஒருவன் தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாது பேணுதலே செய்ங்கன்றியறிதல் என்னும் சீரிய அறமாகும். இல்லறத்தில் வாழ்வார்க்கு உய்தியில்லாத பெருங்குற்றம் நன்றி மறத்தலே என்பர் நல்லறிஞர். ஆதலின், நன்றி பாராட்டும் நல்லறத்தின் மாண்பைச் சொல்ல வந்த வள்ளுவர், எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் அப் பாவத்தி னின்று தப்புவதற்கு வழியுண்டு; ஆல்ை செய்ங்கன்றி கொன்ற பாவத்தினின்று தப்புவதற்கு வழியேயில்லை என்று நன்கு வலியுறுத்தினர். எந்நன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம், உய்வில்க்ல செய்ந்நன்றி கொன்ற மகற்கு." - - என்பது அவர் சொல்லமுதமன்ருே ! இங்கினம் உலகப் பொதுமறை வலியுறுத்திய அறத்தின் மாண்பைக் கண்ட ஆலத்துணர்கிழார் என் அனும் அருந்தமிழ்ப் புலவர் தாம் கிள்ளிவளவனுக்குச் சொல்லிய நல்லுரையில் அதனை அழகுற விளக்கி யுள்ளார். வள்ளுவக் கருவூலத்தில் காணும் குறள் மணியின் பேரொளி விளக்கமாகவே அப் புலவரது பாடல் அமைந்துள்ளது.
- ஆன்முக்ல யறுத்த அறணி லேசர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்