30 வள்ளுவர் சொல்லமுதம் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தார். இதனையே வள்ளுவர் சிறிது விளக்கத்துடன், ‘நன்றி மறப்பது நன்றன்று என்று கவின்றருளினர். அத்துடன் பிறர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்துவிடுதலும் நன்று என்று குறித்தருளினர். நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்பது அவர் சொல்லமுதம். உப்பிட்டவரை உள்ளளவும் கினை என்பது கம் நாட்டுப் பழமொழி. உப்பு மிகவும் அற்பமான பொருளே. எனினும் பருகும் கூழுக்கு உறுசுவை தரவல்ல அவ் உப்பின்றேல் அக்கூழ் குடித்தற்குத் தகுதியின்றிப் பாழாய்ப் போய்விடும். உப்பில்லாப் பண்டத்தைக் குப்பையில் கொட்டுங்கள்! என்று தானே இப்புவி மக்கள் எப்பொழுதும் செப்புவர். அங்கனம் சுவையூட்டும் உப்பை ஒருசிறிது உதவி னுேரையும் ஒருவன் தனது வாழ்நாள் முழுதும் மறவாது எண்ணுதல்வேண்டுமெனின் அறுசுவை உணவை ஊட்டினரை எங்ங்னம் போற்றுதல் வேண்டும் அதனுல்தான் மணிமேகலை ஆசிரியர், மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே." என்று மனமாரப் போற்றினர். - சான்ருேர் கைம்மாறு கருதாது பி றர்க்கு உதவு தலைத் தமது பெருங்கடகைக் கருதுவர். அவர்கள் மாரியனய மாண்பினர். பிறர் தமக்கு ஏதும் நன்மை செய்யாதிருக்கவும் அவர்கள் பிறர்க்கு நன்மை செய்துகொண்டேயிருப்பர். அதல்ை அவர்கட்கு எத்தனே துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றைச்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/38
Appearance