ச. பெண்மையும் திண்மையும் பெண்ணின் தன்மையே பெண்மை எனப்படும். அப் பெண்மையாவது எவரும் விரும்பும் தன்மையே யாகும். பெள்’ என்ற சொல், விரும்பு என்னும் பொருளேத் தருவது. பெட்பு என்பது பெள்’ என் அனும் பகுதியடியாகப் பிறந்த அருந்தமிழ்ச் சொல்லே அன்பு, விருப்பம் முதலிய நற்பண்புகளைக் குறிப்பது அச்சொல். காட்டின் இயல்பைச் சொல்லவந்த நம் வள்ளுவர், . பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு." என்று இயம்பினர். இப் பாவிலுள்ள பெள் தக்கது. என்னும் தொடர், விரும்பத்தக்கது என்னும் பொருள் தந்து கிற்றலைக் காணலாம். ஆகவே பெண் என்ற சொல்லும் பெள் என்ற பகுதியடியாகவே பிறக் திருக்கவேண்டும். விரும்பத்தக்க நல்லியல்புடையாள் பெண்ணென்று குறிக்கப்பெற்ருள். ஆத லி ன் யாவரும் விரும்பும்தன்மையே பெண்மை என்பது பெறப்படும். இத்தகைய பெண்மைக்கு நம் பெருநாவலர் சொல்லும் இலக்கணம் யாது? அப் பெண்மைக்கு அவர் கொடுக்கும் பெருமை யாது? இவற்றை முதற்கண் நோக்குவோம். கற்பினின்று வழுவாத x தன்மை, தன்னை மணந்துகொண்டவனே உண்டி முதலியவற்ருல் நன்முகப் பேணும் இயல்பு, தனது புகழ்-கணவன் புகழ் இவை நீங்காமல் காக்கும் பாங்கு, தனக்குரிய நற்குண நற்செயல்களை உறுதி
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/52
Appearance