பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடியும் மறதியும் 79 மூச்சு, மறந்தால் போச்சு காசு என்பது பழமொழி யாகும். ஒருவன் தன்னல் காக்கத் தக்க துன்பங்களே அவை வருதற்கு முன்பே தெரிந்து காக்கவேண்டும். அங்ஙனம் காவாதான் வாழ்வு, சிறிய நெருப்பின்முன் அகப்பட்ட பெரிய வைக்கோற்போர் போன்று அடியோடு அழிந்துபோகும் என்று மொழிந்தருளினர் அருந்தமிழ்ப் புலவர். அங்ஙனம் காக்க மறந்தவன், பின் துன்பங்கள் வந்த காலத்தில் அவற்றை விலக்க முடியாது தனது பிழையினை எண்ணிப் பெரிதும் இரங்குவான்.

  • முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை

பின்னு றிரங்கி விடும்." என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். அற நூலுடையார் அரசர்க்குரிய செயல்களாக வகுத்துரைத்தவற்றை மறவாது கடைப்பிடித்து ஒழுகவேண்டும். அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழு பிறப்பும் நன்யை ஏற்படாது என்றுர் திரு வள்ளுவர். மன்னர்களிடம் மறவாமைக் குணம் ஒழிவின்றி அமையுமாயின் அதனை ஒக்கும் நன்மை வேறில்லை ; அவர்கட்கு அரியவென்று முடியாத காரியங்கள் எவையும் இலவாகும்; எதனையும் எளிதில் முடிக்கும் வல்லமை பெறுவார் என்ருர் வள்ளுவர். மன்னர்கள் தமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கால் செருக்குற்று இன்புறுங்காலத்து, முன் ளிைல் அங்கிலேயால் அழிவுற்ற மன்னர்களைச் சிறிது எண்ணுவாராக. அங்ஙனம் எண்ணுவாறாயின் மறதி யைப் பெருக்கும் செருக்கை மறப்பர் என்று உரைப்பார் திருவள்ளுவர்.