அமைச்சும் அங்கமும் 8? "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுத்தன் உண்மை அறிவே கிகும்.’ என்பது வள்ளுவர் சொல்லமுதம் அன்ருே ! நூலறிவும் துண்ணறிவும் சால அமையப்பெற்ற அமைச்சர்க்கு உலகறிவும் வேண்டற்பாலதாகும். அவர்கள் ஒரு செயலேத் தொடங்குங்கால் அப் பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனேடு பொருந்துமாறு திருந்தச் செய்தல் வேண்டும். உலக நெறிக்கு ஒவ்வாத செயல்களைச் செய்தால் மக்களின் பழிக்கு ஆளாவர் அமைச்சர். உலகத்தோடு பொருந்த ஒழுகும் வகையறியார் பல. கற்றும் அறிவற்றவரே என்பது வள்ளுவர் உள்ள மன்முே: சிறந்த அறிவிற்கு இலக்கணமே உலகத் தோடு பொருந்த ஒழுகுவதுதான் என்பார் அப் புலவர் : - 'உலகத்தார் உண்டென்பகு) இல்லென்பான் வையத்(து). அலகையா வைக்கப் படும்." என்பது அவர் சொல்லமுதம், உலகறிவு இல் லார்க்குப் பேய் என்றே பெயர்கொடுத்து விடுகிருர் அப்பெருகாவலர். ஏட்டுக் கல்வியினும் காட்டு கடப்பை அறிவது நன்மை பயப்பதாகும். வள்ளுவர் அமைச்சரது கடனே ஒரு குறட்பாவில் நன்கு வரையறுத்து வலியுறுத்துகின்றர். அரசன் தனது ஆணவத்தால் அறிவுடையார் கூறும் அறி வுரைகளை ஏற்காது அழிப்பதும் உண்டு. அவன் கானும் அறியாது தீங்கு இழைப்பதும் உண்டு. இத்த கைய அரசனின் குற்றங்களைக் கருதி அமைச்ச ராயினர் அவனே நீங்குகல் பாங்கன்று. அகலாதும்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/95
Appearance