பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்கி, வெற்றியாம் ஒளியினைப்பரப்பிவிடும்” பொருள் என்றும் பொய்யாவிளக்கம்; இருள்களுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று (753) பொருள். அதைப் பெற்றவனுக்கு அறச் செல்வத்தையும் தரும்; இன்பச் செல்வத்தையும் தரும்; 'அறன் ஈனும்! இன்பமும் ஈனும் (754), பகைவர்களின் செருக்கினைச் சிறுகச்சிறுக அறுத்து அழிக்கவல்ல கூரியவாள் செல்வமே; அது அல்லது வேறு இல்லை. செறுநர் செருக்கறுக்கும் எஃகு அதனில் கூரியது இல்’ (759) பொருளின் இன்றியமையாமை குறித்த திருவள்ளுவர் மதிப்பீடுகள் சில இவை. - . பொருளின் சிறப்புக் களை யெ ல் லாம் உணர்ந்து உணர்த்திய திருவள்ளுர், அதைப் பெறலாம் வழிகளையும் உணர்த்தியுள்ளார் தனிநபர்ஆயினும் அரசேஆயினும் பொருள்ஈட்டும் முதல்வழி. முதலீடுசெய்து தொழில் தொடங்கிப் பொருளைச் செய்வதாம். "செய்கபொருளை, (159) என்பது அவர்களை. அரசனுக்குப் பொருள் சேர்க்கும் வழிகளில் தலையாயது பொருள் இயற்றல் அதாவதுசெய்தல் "இயற்றலும் ஈட்டலும்" என்பது குறள் (385). 'ஈட்டுக’ :இயற்றுக’ என ஆணையிட்டுவிட்ட வள்ளுர் அதைஈட்டும் வழிமுறைகளையும் வகுத்துச் தந்துள்ளார் "ஈட்டவேண்டின் அதற்கு முதல்தேவை. முதல் இலார்க்கு ஊதியம் இல்லை’ என அவர் அறிவுரை வழங்குவது காண்க (449) எடுக்கும் வினைமுதல் இழக்கும் வினையாக அமைதல்கூடாது என்பதால் முதலீடுசெய்து ஈட்டத்தொடங்குமுன், அம்முயற்சியில் செலவிடவேண்டி வருவதுஎவ்வளவு, அவ்வாறு செலவிட்டால் வரும்ஆக்கம் எவ்வளவு என்பதை எண்ணிப்பார்த்து, அழிவினும், ஆக்கம் பெரிதாம் வழியே அம்முயற்சியில் இறங்குதல் வேண்டும் இதையும் கூறியுள்ளார் வள்ளுவர். "அழிவது உம் ஆவது உம் ஆகி, வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்' என்பது குறள் (461). 91