பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்ருேர் கழிநல் குரவே தலை” (657) வஞ்சனை அதாவது பிறரை ஏமாற்றல்போலும் தீய செயல்களால் செல்வத்தைக் குவித்துவைத்துக் கொண்டு அ த ைப் பாதுகாத்துக்கிடத்தல் உலராத பச்சைக் களிமண்ணால் செய்யப்பெற்ற மண்பாண்டத்தில், தண்ணிரை நிறைத்துவைத்துக் காக்க மு ய ன் ற வ ன் செயல்போலும். அதாவது தண்ணிரே அல்லாமல் அதைத்தேக்கிவைத்திருந்த மண்பாண்டமும் இல்லாமல் போனதுபோல், வஞ்சையால் சேர்க்கப்பட்ட செல்வமே அல்லாமல். அதைச் சேர்த்தவனும்) இல்லமால் போய்விடுவள்; ஆகவே வஞ்சையால் சேரும் செல்வம் செல்வம் ஆகாது. இதையும்.உணர்ந்துள்ளார் திரு வள்ளுவர். "சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று' (660) பொருளை எவ்வகைகளில் ஈட்டலாம் எவ்வகைகளில் ஈட்டக்கூடாது என வழிகாட்டிநெறி வகுத்த வள்ளுவர். நல்லார் இடத்தில் சேர்ந்தசெல்வம் எவ்வளவு பயனுடைய தாகும்; ந ல் ல வ ர் . அல்லதார்பால் சேர்ந்தசெல்வம் என்ன பாடுபாடும் என்பதையும் எடுத்து இயம்பியுள்ளார், வகைக்குச் சிற்சில குறட்பாக்கள். உலக இயல்பு அறிந்து வாழ்வதால், உலகத்துப் பெரியவர்களால் விரும்பப்படும். புகழப்படும் பேரறிவாளன் பெற்ற செல்வம், ஊரார்க்கு உண்ணுநீர் அளித்துப் பயன் அளிக்கும் பெருங்குளம் நீரால் நிறைந்து வழிவதுபோல். உற்றார். உறவினர், அயலார் ஆகிய அனைவர்க்கும் பயன்படும்; இதையும் கூறியுள்ளார் வள்ளுவர். 95