பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் பேறுகாலம்", "பெற்றவட்கே தெரியும் பிள்ளையின் அருமை", "பெற்றால் தான் பிள்ளையா" என்ற உலக வழக்கையும் கருத்தில் கொண்டு நோக்கிய வழி என்ற" என்ற சொல்லிற்குப் பதிலாகப் “பெற்ற" என்ற சொல் லைப் போட்டிருக்கலாம் என எண் ணத் தோன்றும், ஆனால் அதை போடவில்லை. காரணம்; இருசொற் களுக்கும் உள்ள பொருள் நிலையே! "நல்லாறு எனினும் கொளல் தீது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று' என்பது (குறள்: 222) 'கொள்வது தீது கொடுப்பது நன்று" (கம்பராமாயணம்) வாணன் வைத்த விழுநிதி பெறினும் நமக்கு எழுக என்னாய்; விழுநிதி ஈதல் உள்ள் மொடு இசை வேட்டுவையே" (மதுரைக் காஞ்சி 203-205) "புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின் உலகு டன் பெறினும் கொள்ளலர்', (புறம் 182) இச்சான்றோர் வாக்குகள், கொள் வார் சிறியர்; கொடுப்பார் பெரியர் என்பதை உறுதிச் செய்கின்றன. ஆகவே, பெற்ற என்ற சொல்லைப் போட்டால், தாய் சிறுமையுடையவளாகி விடுகிறாள். வள்ளுவர், அச் சிறுமையைத் தாய்க்குச் செய்ய விரும்பவில்லை. சிறுமை செய்ய விரும்பாமை மட்டுமன்று; ஈன்ற என்ற சொல்லை அமைத்ததன் மூலம் தாயின் பெருமையை மேலும் காட்டியுள்ளார். "ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே" (தொல், சொல். 439) என்பது தொல்காப்பியம்; அதாவது கொடுப்போர் - உயர்ந்து, கொள்வோர் தாழ்ந்த வழி, தாழ்ந்தோர் உயர்ந்தோரைப்பார்த்து ஏதேனும் கேட்குங் கால் 'ஈ' எனக்கூறல் மரபு. ஆக ஈன்ற என்பதால், தாய் உயர்ந்து, உலகெலாம் தாழ்ந்த நிலை உண்டாகி தாய்க்குப் பெருமை சேர்ப்பதாயிற்று. ' தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது" என்கிறார் வள்ளுவர் (68). ஆக, அவள் ஈன்ற மக்கள் அறிவால் மாபெரும் பயன் அடைந்த, இம்மா நிலத்து மக்கள் எல்லாம் தாமு, அவள் உயர்ந்து ... 3