பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் எது? விடை இல்லை ; ஆக, சான்றோன் எனச் சொன்னவர் உலகத்தார் அனைவரும் எனச் சொன்னார் என்றும் கொள்ளலாம் ; எனச் சொல்கிறார் என்றும் கொள்ளலாம். எனச் சொல்வார் என்றும் கொள்ளலாம். ஆக, வினைமுதலும், காலமும் குறியாச் சிறப்பால், உல கத்தார் அனைவரும் முக்காலத்தும் புகழ்வர் எனும் பொருள் தரும் சிறப்புடையதாகிவிட்டது "என” என்ற இச்சொல். - கேட்ட : - "பெண் இயல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்" எனக் கூறினார் என்பது பரிமேலழகர் கூறும் காரணம். இது கற்கும் உரிமை மகளிர்க்கு மறுக் கப்பட்ட காலத்துக் கொள்கை விளக்கம். அது இப்போது எடு படாது. தன் மகன் சான்றோன் என்பதைத் தாய் அறிவாள். ஆயினும், "என் மகன் சான்றோன்" எனக் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்ள எந்தத் தாயும் விரும்ப மாட்டாள். இது பண்புடைமையும் ஆகாது. தன் மகன் சான்றோன் என்பதைப் பிறர் எல்லாம் ஏன், தன் பகை வர்களும்கூட - கூறக்கேட்ட வழி மகிழ்வதே பண் புடைமையாகும், 'மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை திறமான புலமை எனில், பிற நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்றார் பாரதியார். பாரதியார் புகட்டிய அவ்வறிவுரையை ஏற்றவள் அத்தாய். ஆகவே தான், பிறர் புகழக் கேட்டு மகிழ்ந்தாள். கேட்டதாய்" என்பதற்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை அளித்தவிளக்கம் போற்றுதற்குரியது; அவர் விளக்கம் வருமாறு: ஒரு தாய்; ஆண்டு முதுமையின் எல்லைக்கே சென்று விட்டவள். நடமாட இயலாது. மகன் தன்னுடைய சான்றாண்மையைக் காட்டும் மேடைக்குச் செல்ல இயலாது. கண், பார்வை இழந்து 12