பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரும்பிய வள்ளுவர், ஒருவனுடைய மனத்தின்கண் இருக்க வேண்டிய சிறந்த உறுப்பு அன்பு கை, கால், கண். காது, வாய் ஆகிய புறத்து உறுப்புக்கள் எல்லாம் அன்பின் துணைகொண்டே செயல்படுவன; ஆகவே, அகத்துறுப்பு ஆகிய அன்பு ஒருவனிடத்தில் இ ல் ல ளது போ யி ன் அ ப் பு ற த் து உறுப்புக்களால் பயன் இல்லை' என்ற கருத்தையும் கூறவிரும்பினார்: அதைக் கூறவிரும்பிய அவர், அதை, அப்படியே கூறின், பொருள் சிறவாது என்பது உணர்ந்து, அ. க த் து உறுப்பாகிய அன்பு ஒருவனிடத்தில் இல்லாதபோது, அவனுடைய புறத்து உறுப்புக்கள் எல்லாம் செவ்வனே அமைந்திருந்தும் யாது பயன்? அவற்றால் அவனுக்கு யாதுபயன்? என்ற வினாவை எழுப்பியதன் மூலம், கூறவேண்டியதை வலுவாகக்கூறி வைத்தார். - 'புறத்துஉறுப்பு எல்லாம் எவன் செய்யும்? யாக்கை அகத்துறுப்பு அன்பு இலவர்க்கு' (குறள்: 79) குற்றமே சிறிதும் இல்லாமல், மு மு க் க. முழுக்க குணங்களாலேயே நிறைந்தவனையோ, அதேபோல், குணமே சிறிதும் இல்லாமல், முழுக்க முழுக்க குற்றங்களாலேயே நிறைந்தவனையோ உலகில் காண்பது அரிது; குணமும், குற்றமும் உடையவனே மனிதன். அதனால்தான், ஒருவன் குணாவானா அல்லது குற்றவாளியா எனத் தீர்ப்பளிப்பதன் முன்னர், அவ ன் பால் உள்ள, குணங்களின் அளவு, குற்றங்களின் அளவுகளை எடைபோட்டுப் பார் த் து க் குணங்கள் அதிகமாயின் குணவான் என்றும், குற்றங்கள் அதிகமாயின் குற்றவாளி எனத் தீர்ப்பளியுங்கள் என வள்ளுவர் சட்டம் வகுத்துத் தந்துள்ளார். 'குணம் நாடிக், குற்றமும் நாடி, அவற்றுள் - மிகைநாடி மிக்க கொளல் (குறள்-504) என்பது அது, 24